திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 27-ஆம் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் வர்ணம் பூசும்பணி, கோவில் திருப்பணி, புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

பழனி உட்பிரகாரத்தில் இருந்து தரிசனத்திற்கு மண்டப பகுதியில் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக அங்கு ஏற்கனவே குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 25 லட்ச ரூபாய் செலவில் 50 டன் வசதி கொண்ட குளிர்சாதன இயந்திரம் அங்கு பொருத்தப்பட்ட உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய எந்திரம் பொருத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.