
பள்ளிக்கல்வித் துறையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பணிபுரிந்து வரக்கூடிய அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பகுதிநேர ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குடும்பச் செலவுகளுக்கு போதாது என்ற நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட போனஸ் வழங்கப்படுவது தான் நியாயமாகும்.
ஆகவே அவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க அரசு முன் வர வேண்டும். அதோடு அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது!(1/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 14, 2023