பிரபல ‘நாகினி’ சீரியல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை மௌனிராய், தற்போது சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், திரையுலகில் தனது ஆரம்பகாலத்தில் நடந்த மிகவும் கசப்பான மற்றும் அநாகரிகமான ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு 22 வயது இருக்கும்போது, ஒரு திரைப்பட இயக்குனர் தனது அலுவலகத்திற்கு அழைத்து, பட வாய்ப்பு தருவதாகக் கூறி திடீரெனத் தன்னை முத்தமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்பாராத செயல் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், அந்த வயதில் அது தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மௌனிராய் வெளிப்படுத்தியுள்ள இந்தத் தகவல், திரையுலகில் நிலவும் அத்துமீறல்கள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
