பிரேசில் நாட்டில் காதலை மறுத்ததற்காக ஒரு இளம்பெண் 40 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. அலானா அனிசியோ ரோசா (20) என்ற பெண், தனது ஜிம்மில் பழகிய லூயிஸ் பெலிப் என்ற நபர் கொடுத்த பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளை கண்ணியமாக மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கடந்த பிப்ரவரி மாதம் அலானாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை ஓட ஓட விரட்டி 40 முறைக்கும் மேலாகக் கத்தியால் குத்தியுள்ளார். “எனது வரவேற்பு அறை முழுவதும் ரத்தமாக இருந்தது” என அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
She is Alana Rosa, 20 years old, who was stabbed 40 times after refusing to date a man, attends the first trial hearing of the criminal. All the strength to her, I hope she gets justice for what was done to her. pic.twitter.com/ysR6cINaKr
— Dewy.dee (@deebayleaf) April 18, 2026
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அலானா, பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது மீண்டு வந்து, தனது கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் தைரியமாக ஆஜராகியுள்ளார்.
இந்தச் சம்பவம் பிரேசிலில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ‘பெண்கள் வேண்டாம் என்று சொன்னால் அவர்களைத் தாக்குவது சரிதான்’ என்பது போன்ற நச்சுத்தன்மை கொண்ட வீடியோக்களைப் பார்த்தே அந்த நபர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் மட்டும் பிரேசிலில் 1,568 பெண்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், “ஆண்கள் பெருகிவரும் மனிதாபிமானமற்றவர்களாக மாறி வருகிறார்கள்” என அந்நாட்டு அதிபர் லூலா கவலை தெரிவித்துள்ளார்.
