
சமூக வலைத்தளங்களில் இன்றைய தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாகவே பாம்புகள் இணையத்தில் ராஜாவாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் அடிக்கடி பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் பாம்பு ஒன்று பறந்து வந்த பறவையை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி வேட்டையாடுகிறது. பாறையின் ஓரத்தில் ஒரு புழு ஊர்ந்து செல்வதையும் பறவை புழுவை பார்த்து சாப்பிட செல்வதையும் வீடியோவில் காண முடிகிறது. ஆனால் அங்கிருந்த பாம்பின் தந்திரத்தால் பறவையை ஒரே நொடியில் குதறி விடுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க