தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில் தற்போது ஆளுநர் மாளிகைக்கு விஜய் சென்றுள்ளார். ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை நடிகர் விஜய் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைத்ததால் 120 பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பாக பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் சி.வி. சண்முகம், எஸ் பி வேலுமணி ஆகியோரது தலைமையில் கிட்டத்தட்ட 36 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக ஆர்பி உதயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பொறுத்து இருங்கள் நல்லதே நடக்கும் என்று கூறினார்.
