நைஜீரியாவில் நேற்று இரவு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து 70-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதோடு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் சுரங்க நடவடிக்கைகளுக்கு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் வெடிபொருட்களை பதிக்க வைத்திருந்தார்கள் என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ஓயோ ஆளுநர் மகிந்தே கூறியுள்ளார்.