மேற்கு வங்கத்தின் பபானிபூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் பொதுக்கூட்டங்கள் வெறும் 100 மீட்டர் இடைவெளியில் சனிக்கிழமை நடைபெற்றன.

மேலும் மம்தா பானர்ஜி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அருகில் நடைபெற்ற பாஜக கூட்டத்தின் ஒலிபெருக்கி சத்தம் தனது கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி அவர் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மம்தா, தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு, கூட்டத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மேடையை விட்டு வெளியேறினார்.

“>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பபானிபூரில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் போக்கு நிலவியது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மம்தா தோல்வி பயத்தில் மேடையை விட்டு ஓடுவதாக பாஜக விமர்சித்துள்ள நிலையில், பாஜகவின் “குண்டர் ராஜ்ஜியத்திற்கு” தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். பபானிபூர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.