தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படத் தொடங்கியதிலிருந்து, சபாநாயகர் மக்களின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாக மாறியுள்ளார். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவர் காட்டிவரும் நடுநிலையான செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.
முந்தைய காலங்களைப் போல் அல்லாமல், தற்போது எதிர்க்கட்சி அல்லது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்ற பாரபட்சமின்றி நடுநிலையாகச் செயல்படுவதும், அவைக் குறிப்பு விதிகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து அமைச்சர்களின் பேச்சைக் கூட உடனுக்குடன் மியூட் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளும் பொதுமக்களை வியப்படையச் செய்துள்ளன.
74 வயதிலும் துடிப்புடன் செயல்படும் இவரது விதம், அரசியல் மேல் பெரிதாக ஈடுபாடு இல்லாத சாதாரண மக்களையும், தொலைக்காட்சி சீரியல்களை விடுத்து சட்டமன்ற நேரலையை ஆர்வமுடன் கவனிக்க வைத்துள்ளது. 1980-களில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போதைய அவையில் தனது கடுமையான உழைப்பு மற்றும் கண்டிப்பான மரபுகளால் தனித்து நிற்கிறார். தனது தந்தை மற்றும் சகோதரர்களால் இளம் வயதில் சட்டமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, “எந்தக் சூழ்நிலையிலும் நேர்மையோடு செயல்பட வேண்டும்; தவறான வழியில் ஈட்டிய எந்தப் பொருளும் வீட்டிற்குள் நுழையக்கூடாது” என்ற தந்தை வழங்கிய பொன்மொழிகளே இன்றும் தனது அரசியல் வாழ்விற்கு வழிகாட்டியாக இருப்பதாக அவர் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழகம் அதிகம் அறிந்த மூன்றாவது முகம் யாருடையது என்றால் அது சபாநாயகர்
ஜே. சி. டி. பிரபாகர்தான்…எந்த முதலமைச்சரும் செய்யாத சாதனையாக சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு முதல்வர் விஜய்க்கு புகழை சேர்த்திருக்கலாம்…
ஆனால், அந்த நேரலையில் ஹீரோவாக ஜொலிப்பவர் ஜே. சி. டி.… pic.twitter.com/oMkgL5R97f
— Diya ✨️ (@PinkSonnet1) August 19, 2026
“>
அரசியல் களத்தில் நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த இவரது செயல்பாடு தமிழக இளைஞர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
