தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் திரைப்படத் துறை மற்றும் அரசியல் களத்தில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நிலையில், அவர் தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிக்குக் கொடுத்த வாக்குத் தவராத உறுதியைக் குறிக்கும் சுவாரஸ்யமான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்யின் திரைப்படத்தை இயக்கியப் புகழ்பெற்ற ‘பிரபல இயக்குநர்’ ஒருவர், தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து தனக்கு விருப்பமான சட்டமன்றத் தொகுதி ஒன்றைக் கேட்க, அதனைத் தனக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த இயக்குநரின் கோரிக்கையைக் கேட்ட விஜய், சற்றும் யோசிக்காமல், “நண்பா… அந்தத் தொகுதியின் செயலாளர் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கட்சிக்காகக் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். அதனால் அந்தத் தொகுதியை உமக்குத் தர முடியாது!” என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பெரிய பிரபலங்கள் அல்லது இயக்குநர்கள் கேட்டாலும், கட்சிக்காகக் களத்தில் நின்று உழைத்த அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் செயலாளர்களின் உரிமைகளுக்குத் தளபதி விஜய் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
. @BussyAnand : தளபதி @ActorVijay படத்தை இயக்கிய ஒரு ‘பிரபல இயக்குனர்’ தளபதியிடம் வந்து ஒரு தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு கேட்டார்,
• ஆனால் தளபதி @TVKVijayHQ அவர்கள், நண்பா… அது என்னுடைய மாவட்டச் செயலாளர் இருக்கிறது அவர் அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் அதை என்னால் தர… pic.twitter.com/LCYOjYzKdN
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 19, 2026
“>
கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லும் விஜய்யின் இந்த அதிரடியான மற்றும் நியாயமான நிலைப்பாடு தற்போது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
