பொது இடத்தில் பெண் நிருபர் ஒருவர் செய்தி நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பில் (Live Telecast) செய்திகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், கேமரா ஓடிக்கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த பெண் நிருபரைத் தேவையில்லாத முறையில் தவறாகத் தொட்டார் (Touch). லைவ் போய்க்கொண்டிருந்ததால் அந்தப் பெண் அதைத் தவிர்த்துவிட்டுத் தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், செய்தி நிறுவனத்தின் மெயின் ஆபீஸில் இருந்து இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த செய்தி தொகுப்பாளர் அந்த நபரின் அநாகரிகச் செயலைக் கண்டு உடனடியாக நேரலையிலேயே குறுக்கிட்டார்.
அந்தப் பெண்ணிடம் பேசிய தொகுப்பாளர் “இப்போது அந்த நபர் உங்களிடம் தேவையில்லாமல் தவறாகத் தானே நடந்துகொண்டார்? கேமராவைத் திருப்பி அந்த நபரின் முகத்தை கேமராவில் காட்டுங்கள்” என்று அதிரடியாகக் கூறினார். அதன்படி கேமராவில் அந்த நபரின் முகம் காட்டப்பட்ட நிலையிலும், அவர் மீண்டும் வந்து அந்தப் பெண் நிருபரின் தலையில் கை வைத்தார். நிருபர் சாமர்த்தியமாக அதைத் தவிர்த்து நகர்ந்தபோதும், அந்த நபர் அங்கிருந்து போகாமல் நிருபருக்குப் பின்னாடியே தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தார்.
I'm glad the police stepped in to put him in his place. pic.twitter.com/wKhKtuf0Sv
— Raw Combat (@Raw_Combat_) May 17, 2026
நிலைமை சரிவராததை உணர்ந்த செய்தி தொகுப்பாளர் “அவரைத் தவிர்த்துவிடுங்கள்” என்று நிருபருக்கு அறிவுறுத்திவிட்டு, உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த போலீசார், நேரலையிலேயே அத்துமீறிப் பின்னாடியே சுற்றி வந்த அந்த நபரைப் பிடித்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
