நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தை இப்போது பிரச்சினை ஆக்குவதற்கு திமுக மற்றும் பாஜக அரசுகள் தான் காரணம் என்றார். தமிழக அரசுக்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும்போது, இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களைச் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் வரும்போது மட்டும்தான் கட்சிகளுக்கு மக்கள் மீது பாசம் வரும் என்றும் அவர் விமர்சித்தார்.
அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார். மேலும், சிவன், முருகன் போன்றோர் இந்து கடவுளா என்று என்னுடன் விவாதம் செய்ய யாராவது தயாரா என்று சவால் விட்டார்.
மதத்தை விட மனிதனே முக்கியம் என்றும், தமிழ்நாட்டை ஒரு குறிப்பிட்ட மத நாடு போல மாற்றாமல், மக்கள் வாழும் நாடாக உருவாக்கவே நாம் தமிழர் கட்சி விரும்புவதாகவும் அவர் கூறினார். கடைசியாக, பணமில்லாமல் தேர்தல் போட்டியிட திமுக, அதிமுகவுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் அவர் சவால் விடுத்தார்.
