ஓபிஎஸ் திமுகவில் இணையப்போகும் சூழலால், தென்மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வருபவர்களுக்குத் தலைமை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதுடன், அவர்களுக்கு முக்கியப் பதவிகளையும் வாரி வழங்குகிறது. இதனால் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகள் ஓரம் கட்டப்படுவதாக உணர்ந்து முகம் வாடிப் போயுள்ளனர்.

​மற்றொரு பக்கம், ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்த ஓபிஎஸ் தற்போது திமுகவைப் புகழ்ந்து பேசுவது அவரது செல்வாக்கைச் சரித்துள்ளதாக அதிமுகவினர் விமர்சிக்கின்றனர். ஓபிஎஸ்ஸின் இந்த திடீர் அரசியல் மாற்றத்தால், அவருக்கு இருந்த சமூக ரீதியிலான ஆதரவும் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.