நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில்இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.   நாகர்கோவில் – தாம்பரம் அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் இன்று நாகர்கோவிலுக்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.

பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் இன்று  கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் இன்று திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும். நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இன்று  மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.