தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு  நடத்தப்பட்டது. இவர்கள் அதே கல்வியானின் மேற்படிப்பு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜூன் மாதமே தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளும் வெளியானது.

இந்நிலையில் +2 துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், இன்று முதல் www.dge.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாளின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஆக.12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு (பாடம் ஒவ்வொன்றிற்கும்) ரூ. 505, மறுகூட்டல்-II உயிரியல் பாடத்திற்கு ரூ. 305, ஏனைய