
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்று கட்சியை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரசுக்கு மொத்தம் நான்கு எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிலையில் நேற்று சட்டசபை குழு தலைவராக இருந்த லம்போ தையெங் அக்கட்சியில் இணைந்துள்ளார்.