வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது . இது முன்னதாக இது குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது .வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு திறனறித் தேர்வு நிகழாண்டு ஜூன் மாதத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்த தேர்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்று அவசியம். அவ்வாறு தகுதி சான்று இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது .அதன்படி ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6 மணி வரை என்எம்சி இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடும் விவரங்களுக்கு  NMC  இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.