மத்திய அரசின் பல திட்டங்களில் மாதவிடாய் சுகாதார திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பெரும்பாலான பெண்களுக்கு தெரியாமல் கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பைபரால் செய்யப்படும் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.  இனியாவது அரசால் வழங்கப்படும் பெண்களுக்கான சுகாதார திட்டங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2018 ஆம் வருடம் ஜூன் 4-ம் தேதி உலகம் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மத்திய அரசு மக்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான நாப்கின்களை வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

இந்த சானிடரி நாப்கின்கள் மிகவும் மலிவான மற்றும் மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய் மட்டுமே. ஒரு பாக்கெட்டில் 10 நாப்கின்கள் இருக்கும் .அதன் விலை வெறும் 10 ரூபாய் மட்டுமே. மத்திய அரசின் இந்த ஜனஆவும்ஷாதி சுபிதா ஆக்ஸோ மட்கும்  நாப்கின்கள் பிரதம மந்திரியின் மலிவு மருந்துகள் திட்டத்தின் கீழ் செயல்படும் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும். தமிழ்நாட்டில் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் இந்த மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் இந்த மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண்களின் சுகாதார நிலையை  மேம்படுத்துவது தான்.