இந்தியாவில் வேலை செய்யும் அனைவரும் பிஎப் கணக்கை வைத்துள்ளனர். இந்த கணக்கு EPFO நிறுவனத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும். இதனை உங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நீங்கள் பெற முடியும். அவ்வாறு இல்லாமல் பணத்தை இடையில் திரும்பப் பெற வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.

அதாவது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வழிகள் உள்ளன. அதாவது ஆப்லைன் முறையில் பெற படிவம் 19 பயன்படுத்தி இருந்து பணத்தை எடுக்கலாம். நீங்கள் முழு பணத்தையும் எடுக்கலாம் அல்லது அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இந்த படிவத்தை பூர்த்தி செய்து 20 நாட்களுக்குள் பணம் கிடைக்காதவர்கள் தங்களுடைய பிராந்திய பிஎஃப் கமிஷனரிடம் புகார் செய்யலாம்.

ஆன்லைன் மூலம் பிஎஃப் பெற எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு UAN மற்றும் கடவுச்சொல் மூலமாக EPFO இணையத்தளமான unifiedportal-mem.epfindia.gov.in என்ற பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்

அதன் பிறகு ஆன்லைன் சேவைகள் என்பதில் கிளைம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் உங்களுடைய சரியான கணக்கு எண்ணை உள்ளிட்டு சரிபார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் EPFO வழங்கிய விதிகளை பின்பற்றி அதனை முடிக்க வேண்டும். இப்போது நீங்கள் உங்களுக்கு பணம் தேவை என்று விண்ணப்பிக்கலாம்.