
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அம்பரீஷ் (28) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அஜய் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தொழிலாளியாக இருக்கும் நிலையில் நெருங்கிய நண்பர்கள் ஆவார். இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் அம்பரீஷ் அடிக்கடி அஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அஜயின் மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அடிக்கடி அஜய் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியுடன் அம்பரீஷ் உல்லாசம் அனுபவித்தார். இது அஜய்க்கு தெரிய வரவே அவர் தன் நண்பனையும் மனைவியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் சொல்வதை கேட்காததால் கோபத்தில் அஜய் அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி மற்றொரு நண்பனுடன் சேர்ந்து அஜய் அம்பரீசை வேறொரு பகுதிக்கு அழைத்து சென்று தன் மனைவியுடன் கள்ள உறவை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் தன் நண்பன் உதவியுடன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அஜய் போலீசில் சரணடைந்த நிலையில் அவரது நண்பர் தலைமறைவாகி விட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.