இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒருவர் தனது நெத்தியில் சேவ் செய்யப் பயன்படுத்தப்படும் கத்தியால் சிறிய காயம் ஏற்படுத்தி, இரத்தம் வெளியாகச் செய்கிறார். இரத்தம் சிந்தியபடி அவர் ஒரு கோயிலுக்குச் சென்று மணி அடித்து, தெய்வத்தை வணங்குகிறார். இந்தக் காணொளியுடன், நீண்ட கால பாரம்பரியமாக துர்கா தேவிக்கு தனது இரத்தத்தை காணிக்கையாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பக்தியின் பெயரில் நடப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காணொளி வைரலான நிலையில், பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். ஒருவர், “கடவுள் இப்படி செய்யச் சொன்னாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், “ஒரே கத்தியைப் பயன்படுத்தி பலருக்கு வெட்டும்போது, எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் அபாயம் இல்லையா?” என்று கவலை தெரிவித்துள்ளார். இந்தக் காணொளி மக்களிடையே பக்தி, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.