தீபாவளி கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெறும் போது, சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு காணொளி உற்சாகத்தை ஆபத்தான சாகசமாக மாற்றியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு பெண் தன் தலையில் பட்டாசுப் பெட்டியை ஏற்றி வைக்கிறார். இதுவரை சிறுவர்கள்தான் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள், ஆனால் இப்போது பெண்களும் இதுபோன்ற ஸ்டண்ட்களை செய்வதாகவும் பார்க்க முடிகிறது.

 

மேலும் அந்த வீடியோ ஆரம்பத்தில், பெண் பட்டாசுப் பெட்டியை கையில் எடுத்துக் கொள்கிறார். பின்னர் அதை தலையில் வைக்கிறார். அதன்பின் பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தொடங்குகின்றன. அவர் சாலையின் நடுவில் நின்று இந்த ஸ்டண்டை செய்கிறாள். இதை யாரோ பதிவு செய்கிறார். திடீரென்று ஒரு பட்டாசு பெண்ணின் மீது வெடிக்கிறது. அதன் பிறகு, பயந்து பெண் பட்டாசுப் பெட்டியை சாலையில் விட்டுவிட்டு மிக வேகமாக ஓடுகிறார்.