கோவையில் நேற்று விமான நிலையத்தில் திமுக அமைச்சர் முத்துசாமியை அங்கு கூட்டத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த பாதுகாப்பு படை அதிகாரி நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் அங்கு சிறுது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமான தொண்டர்களை அமைதிப்படுத்த தற்போது பேசியுள்ள அமைச்சர் முத்துசாமி, பாதுகாப்பு படை வீரர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் மும்முரத்தில் இருந்ததால் அவர்கள் கவனிக்காமல் இவ்வ்வாறு செய்துவிட்டனர். தெரியாமல் செய்த தவறை பெரிதுபடுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.