தமிழகத்தில் கடந்த வருடம் நுகர்வோருக்கான பொது சேவை மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்பு போன்ற பொது சேவைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் மற்றும் மாதாந்திர நிரந்தர கட்டணம் கிலோ வாட்-க்கு 100 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநில முழுவதும் பத்து லட்சம் பொது சேவை மின் இணைப்புகளுக்கு புதிய மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பொது சேவை பிரிவுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 8. 15 ரூபாயும், நிரந்தர கட்டணம் 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை எழுந்த நிலையில் தமிழகம் இன்பாரியம் நவம்பர் 1ஆம் தேதி முதல் பொது சேவை பிரிவுகளுக்கான மின் கட்டணத்தை மாற்றி உத்தரவிட்டது. பத்து அல்லது அதற்கு குறைவாகவும் மூன்று மாடியில் அல்லது அதற்கு குறைவாகவும் லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது சேவை பிரிவுக்கான கட்டணம் ஒரு யூனிட் 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டது.

இதற்கு ஒன் இ என்ற புதிய கட்டண விகிதம் நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஒன் டி பிரிவில் மாற்றப்பட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து ஒன்றிய மின் கட்டண விகிதத்தை மாற்றும் பணி டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிப்பதற்கு முன் வாரிய முத்தரவிட்டுள்ளது. பலரும் இந்த பணிகளை முடிக்காத நிலையில் நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பழைய உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். எனவே நுகர்வோருக்கு இது தொடர்பாக அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.