விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சிவாங்கி. இதையடுத்து சிவாங்கி குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிவாங்கி, பின் 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.

இதில் நன்றாக சமைத்து வந்த சிவாங்கி திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டதாக கூறினார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன் பிறந்தநாளில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார் சிவாங்கி.

இந்நிலையில் லைவில் தர்ஷன் வந்து இந்த பிறந்தநாளில் நீ உன்னுடைய காதலனை சந்திக்க என் வாழ்த்துக்கள் என கூறினார். அதுபோன்று நீ யாரை காதல் செய்கிறாய் என்பதை சொல்லு என தர்ஷன் கேட்க, அதற்கு சிவாங்கி நான் இன்னும் அந்த நபரை பார்க்கவில்லை. இந்த வருடம் அவரை பார்த்து விட வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என் காதலனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என விளையாட்டாக சிவாங்கி கூறி இருக்கிறார்.