மதுரையில் நடைபெறவுள்ள NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை திமுக அரசு அதைச் செயல்படுத்தாமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் மனு கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆன்மீக விவகாரங்களில் திமுக அநாகரிகமான அரசியல் செய்து வருவதாகச் சாடினார். மதுரையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த மெகா பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
