முன்னதாக சீரியல்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். அதன்பிறகு லிப்ட், டாட்டா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வளம் வந்தார். இதற்கு அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். பிக் பாஸில் லாஸ்லியாவை காதலித்த கவின் வெளியே வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

தற்போது கவின் தான் நீண்ட நாள் காதலித்து வந்த  பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடைய திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.