காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு துறைகளை சார்ந்த அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி கல்வித்துறையை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட், CUET உள்ளிட்ட தேர்வுகள் கட்டாயம் இல்லை என்ற வாக்குறுதி இடம் பெற்றுள்ளது. மேலும் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.