பழைய வாகனத்தை வாங்கும் போது கட்டாயம் ஓனர்கள் ஆர்சி புக்கில் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலரும் பழைய காரை வாங்கி பழைய ஓனர்களின் பெயரின் காரை இயக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு பழைய காரை வாங்கும்போது அதற்கு NOC சர்டிபிகேட் வாங்கி அதன் பிறகு உடனடியாக வாகனத்தின் பெயரை மாற்ற வேண்டும். புதிதாக வாகனங்களை வாங்கும் போது வாகனத்தின் மீது ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்த பிறகு தான் பழைய காரை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் கார் வாங்கும் போது இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எவ்வளவு வருடங்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளது இன்னும் எவ்வளவு வருடத்தில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்கான விவரங்கள் அனைத்தையும் கட்டாயம் புதிய ஓனர்கள் அறிந்திருக்க வேண்டும். ஒருவேளை பழைய காரை வாங்கி ஆர்சி புக்கில் பெயர் மாற்றம் செய்யாமல் காரை இயக்கிக் கொண்டு இருந்தால் காவல்துறை சார்பாக 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.