இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதனால் இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மொபைல் செயலிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ரயில்வே பயணிகளுக்கு ஐ ஆர் சி டி சி எச்சரிக்கை விடுத்துள்ளது. எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வகையில் தங்கள் வழியை மாற்றிய சைபர் குற்றவாளிகள் ஐ ஆர் சி டி சி என்ற பெயரில் போலியான செயலிகளை உருவாக்கி வருகிறார்கள்.

அவற்றில் ஐ ஆர் சி டி சி ரயில் கனெக்ட் என்ற செயலை உள்ளது. சைபர் குற்றவாளிகள் ஃபிஷிங் இணைப்புகளின் உதவியுடன் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது. எனவே பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வோர் இத்தகைய மோசடிவடையில் சிக்காமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.