சோசியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஆப்பிரிக்காவின் கென்யா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 28 வயது வாலிபர் ஹெலிகாப்டரில் தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வாலிபர் ஹெலிகாப்டரில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த நபர்களிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் அவர் கீழே இறக்கி விடப்பட்டார். சிறிது நேரம் கழித்து  ஹெலிகாப்டர் புறப்பட தயாரான போது அந்த வாலிபர் அடிப்பகுதியில் இருக்கும் கம்பியை கெட்டியாக பிடித்து தொங்க தொடங்கினார்.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறி சத்தம் போட்டனர். அந்த நபர் அந்தரத்தில் ஹெலிகாப்டரை பிடித்துக் கொண்டே தொங்கியதை பார்த்து அதிர்ச்சி myaடைந்த பைலட் காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.