நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க முடிகிறது. இதனால் ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கிடையில் உங்களின் ஆதார் கார்டை உங்களுக்கே தெரியாமல் தவறான வழிகளில் பயன்படுத்த இயலும். இதை கண்டறியவதற்கு தற்போது வசதிகள் வந்துவிட்டது.

UIDAI-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் “ஆதார் அங்கீகார வரலாறு” என்பதை பயன்படுத்தி கடந்த 6 மாதங்களில் நீங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்திய செயல்முறைகளின் பதிவுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். முதலில் uidai.gov.in எனும் UIDAI-ன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு போகவேண்டும். இதையடுத்து உங்களுக்கான மொழியை தேர்வு செய்யவேண்டும். தற்போது எனது ஆதார் பகுதிக்கு சென்று ஆதார் சேவைகள் பிரிவின் கீழ் உள்ள ஆதார் அங்கீகார வரலாறு என்பதைக் கிளிக் செய்யவேண்டும். பின் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.

இவற்றில் உங்களின் ஆதார்எண், பாதுகாப்பு குறியீடு போன்றவற்றை உள்ளிடவேண்டும். அதனை தொடர்ந்து உங்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளீடு செய்யவேண்டும். இப்போது ப்ரொசீட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும் உங்கள் ஆதார் கார்டின் அனைத்து விபரங்கள் மற்றும் கடந்த காலத்தில் நீங்கள் ஆதாரில் மேற்கொண்ட செயல்முறைகள் பற்றி காண்பிக்கப்படும். நீங்கள் அதிகபட்சம் 50 பதிவுகளை பார்க்க இயலும். இதில் ஏதேனும் தவறான பயன்பாட்டுக்காக உங்களின் ஆதார் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தால் 1947 (அ) [email protected] என்ற மின் அஞ்சல் வாயிலாக தொடர்புக்கொண்டு புகாரளிக்கலாம்.