விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் யார் என்று நன்றாகவே தெரியும். ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு இருந்தவர்கள் யார்? பாஜகவின் தாய் கழகமான ஜன சங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் யார்? பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள் யார்? திராவிடம் அதிகாரத்திற்கு போக அரியணை ஏற பீகார் பார்ப்பனன் பிரசாந்த் கிஷோர் பாண்டே தேவைப்படுகின்றார்.

தற்போது ராபின் ஷர்மாவை கூட்டி வந்துள்ளனர். அவர் ஒரு ஆரியர். நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மேலே வருவதற்கு அவன் பக்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உங்கள் முன்னேற்றத்திற்கு அவனுடைய மூளை தேவைப்படுகிறது. ஆனால் எங்களை மட்டும் சங்கி என்று விமர்சனம் செய்கிறார்கள் இது எந்த விதத்தில் நியாயம் என திமுகவை சீமான் விமர்சித்துள்ளார்.