இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். பேடிஎம் மற்றும் போன் பே மூலமாக ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கூகுள் பே மொபைல் ரீசார்ஜ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கூகுள் பே புதிய convenience fees பற்றி டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டத்திற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்றும் 200 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் இரண்டு ரூபாயாகவும் 300 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் கூகுள் பே நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் சமீப காலமாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி ரீசார்ஜ் கட்டணங்களுக்கு என கூகுள் பீஸ் என்ற புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் பே நிறுவனத்தின் மற்ற சேவைகள் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. இருந்தாலும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் செயலி மூலமாக ரீசார்ஜ் செய்யலாம்.