அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக நீதிபதி செந்தில் தரப்புக்கு சில கேள்விகளை முன் வைத்தார்கள். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது போன்ற பல்வேறு விஷயங்களை தெரிவித்தார்கள். அப்போது நீதிபதிகள் மருத்துவ அறிக்கை தாங்கள் படித்து பார்த்ததாகவும்,  அதில் செந்தில் பாலாஜிக்கு சீரியஸ் ஆக எதுவுமே இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் பைபாஸ் ஆபரேஷன் என்பது  சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் செந்தில் பாலாஜியினுடைய மூளை பாதிப்பு குறித்து நீங்கள் கூறியதை கூகுளில் படித்து பார்த்ததாகவும்,  அவை அனைத்துமே மருந்துகளால் சரி செய்து விடலாம் என்பதை தெரிந்து கொண்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்கள்.