இன்றைய டிஜிட்டல் உலகில் எப்போது, எது வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களின் வங்கி Balance காரணமாக சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் @adnankhanhq என்ற கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் அங்கிருந்த இளைஞரிடம் ஒரு வினோதமான சவாலை முன்வைக்கிறார். அதன்படி, அந்த இளைஞர் தனது நெருங்கிய நண்பர்கள் மூவருக்கு போன் செய்து, அவர்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க வேண்டும். அந்த மூன்று நண்பர்களின் கணக்கிலும் உள்ள மொத்தத் தொகையை அந்த இளைஞருக்கு பரிசாக வழங்குவதாக அந்த நபர் வாக்குறுதி அளிக்கிறார்.

பல்லாயிரக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஆர்வத்துடன் அந்த இளைஞர் தனது நண்பர்களுக்கு போன் செய்யத் தொடங்கினார். ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அந்த இளைஞரை பொதுவெளியில் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கின.

 

 

View this post on Instagram

 

A post shared by Adnan Khan HQ (@adnankhanhq)

இளைஞர் தனது முதல் நண்பரைத் தொடர்பு கொண்டபோது, அவரது கணக்கில் வெறும் 3 ரூபாய் மட்டுமே இருந்தது. சற்றும் தளராத இளைஞர், இரண்டாவது நண்பரைத் தொடர்பு கொள்ள, அவரோ தனது கணக்கில் 7 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்தார். கடைசி நம்பிக்கையாக மூன்றாவது நண்பருக்கு போன் செய்தபோது, “மச்சான், என் அக்கவுண்டில் ஒன்றரை ரூபாய் (₹1.50) தான் இருக்கிறது” என்று அவர் கூற, மொத்த சவாலும் அந்த இளைஞருக்கு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. அந்த நபர் சொன்ன சவாலின் படி, மூன்று நண்பர்களின் மொத்தப் பணத்தையும் சேர்த்தாலும் அந்த இளைஞருக்கு ரூ. 11.50 மட்டுமே கிடைத்தது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தம்பி, நீ நேரடியாக அம்பானிக்கே போன் செய்திருக்கலாம் என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார். பாவம், அந்த இளைஞரைச் சுற்றிலும் வறுமைதான் சூழ்ந்திருக்கிறது என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால் எதிரிகளே தேவையில்லை, தயவுசெய்து எனக்கு மட்டும் போன் செய்துவிடாதே என பலரும் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தற்போது வரை ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, “நண்பர்கள் என்றால் பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் இவ்வளவு ஏழையாக இருக்கக்கூடாது என்ற நகைச்சுவை கலந்த விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.