பீகார் மாநிலம் பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) இரண்டு பேர் ஒரு நிர்வாணமான இறந்த உடலை படிகளில் இழுத்துச் செல்வதை காட்டும் அதிர்ச்சி தரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த உடல் பெட்டியா-நவ்டன் சாலையில் உள்ள பலாம் நகருக்கு அருகே கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவில், மருத்துவமனை ஊழியர்களாக கருதப்படும் இரண்டு பேர், அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடலை படிகளில் இழுத்துச் செல்வதை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளன. “பெட்டியாவில் ஒரு அடையாளம் தெரியாத உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இழுக்கப்பட்டது. அவர் யாரோ ஒருவரின் சகோதரர் அல்லது தந்தை இருக்கலாம். இந்த கொடூரமான காட்சிகளில் பீகார் அரசு மனிதர்களிடம் எவ்வளவு உணர்ச்சி அற்றது என்பது தெளிவாக தெரிகிறது” என்று ஆம் ஆத்மி கட்சி அரசை விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபம் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. ஜன் சுராஜ் கட்சியும் இதேபோல் அரசின் அலட்சியத்தை சாடி, உடனடி நடவடிக்கை கோரியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்கு எதிரானவை என்பதால், பொதுமக்கள் இதற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பீகார் அரசின் மருத்துவ சேவைகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதால், அரசு உடனடியாக இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
शर्म आनी चाहिए सरकार को 😡
बिहार के बेतिया में पोस्टमार्टम के बाद एक अज्ञात शव को घसीटते हुए ले जाया गया। यह व्यक्ति किसी का भाई या पिता होगा।
घटना GMCH अस्पताल की है। जीवित हो या मृत -इंसानों के प्रति कितनी संवेदनशील है बिहार सरकार, इन भयानक तस्वीरों से साफ समझा जा सकता है। pic.twitter.com/fhFNbaxlDM
— Aam Aadmi Party Delhi (@AAPDelhi) August 12, 2025
