ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது குறித்த அறிக்கையில், ஒட்டு மொத்த வட மேற்கு பகுதியில், 2025ல் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும் என்று அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது.