சீன நாடானது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கட்டமைத்து வருகிறது. நியூட்ரினோக்கள் எனப்படும் “பேய் துகள்களை” கண்டறிவதே இதன் முக்கியப் பணியாக இருக்கும். இந்தத் தொலைநோக்கியானது இவ்வகையான அளவில் மிகப்பெரிய தொலை நோக்கியாக இருக்கும். நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரான் ஆகும் என்றாலும், நியூட்ரான்களைப் போல, அவைகளுக்கு மின்னூட்டம் இல்லை.

பேய்த் துகள்கள் மற்ற துகள்களுடன் அரிதாகவே தொடர்பு கொள்கின்றன. சில நேரங்களில் அவை நீர் மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்வதானால் சீனா தனது பேய் மூலக்கூறு கண்டறிதல் தொலைநோக்கியை கடலுக்கடியில் உருவாக்கி வருகிறது.