உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையின் ஒரு பகுதியாக, மருமகளை நள்ளிரவில் எழுப்பி மாந்திரீக சடங்கு என்ற பெயரில் மிக மோசமாக நடத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, திருமணத்தின் போது அவரது தந்தை பார்ச்சூனர் கார் உட்பட பல லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தும், கணவர் வீட்டார் திருப்தியடையவில்லை.
கார் தனது பெயரில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்தப் பெண்ணை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு 12 மணிக்கு அந்தப் பெண்ணை எழுப்பிய மாமியார், ஒரு வினோத சடங்கிற்கு வற்புறுத்தியுள்ளார். அங்கு சென்ற அந்தப் பெண், தனது கணவர் உட்பட வீட்டில் இருந்த அனைத்து ஆண்களும் நிர்வாண நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மாந்திரீக சடங்கு என்ற பெயரில் அந்தப் பெண்ணையும் ஆடையின்றி இருக்குமாறு வற்புறுத்தியதுடன், வலுக்கட்டாயமாக மாமனாரின் அறைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு மாமனார் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் சாம்பலைப் பூசி வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த வினோத மற்றும் கொடூரமான செயல் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் வாக்குமூலம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
