உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், ‘சோட்டு’ என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து, தனது காதலனுடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக நின்றார்.
மேலும் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பொதுவாக இதுபோன்ற சூழல்களில் கணவர்கள் ஆத்திரப்படுவது வழக்கம், ஆனால் இங்கு அந்தப் பெண்மணியின் கணவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது தனது மனைவியின் பிடிவாதத்தைக் கண்ட கணவர், சண்டையிடுவதற்குப் பதிலாக, தானே முன்னின்று தனது மனைவிக்கும் அவரது காதலனுக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தார். மனைவியின் மகிழ்ச்சியே முக்கியம் என்று கருதி அவர் எடுத்த இந்தத் தாராள மனப்பான்மையுடனான முடிவு, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
