பீகார் மாநிலம் வைசாலியில் மது போதையில் இருந்த 3 இளைஞர்கள் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயல், மனிதர்கள் மட்டுமின்றி, அப்பாவி விலங்குகளுக்கும் கொடுமைப்படுத்தக்கூடிய அளவுக்கு சிலர் செல்லக்கூடிய கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் மகவாவில் உள்ள கதம் சவுக்கின் அருகே நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆட்டின் உரிமையாளர் புகார் அளித்த பின்னர் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மூன்று இளைஞர்களும் மது போதையில் இருந்ததாகவும், கர்ப்பிணி ஆட்டை தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த கிராம மக்கள், மூவரில் ஒருவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.