திருவண்ணாமலையில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்து அதன் பின் பசுபிக் பெருங்கடலில் தீவை ஒன்றை விலைக்கு வாங்கி அந்த தீவிற்கு கைலாசா  என பெயரிட்டு விஸ்வரூபம் எடுத்தவர் சாமியார் நித்தியானந்தா. இவர் கடந்த 2010 வருடம் நடிகை ஒருவருடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி தமிழ்நாட்டை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுகள், சிறுமிகளை அடைத்து வைத்தல், பெண் பக்தர்களை வசியம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து  செல்லுதல், ஆசிரமங்களில் சோதனை என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கிடையே ஆபாச சிடி விவகாரத்தில் கைதான இவர் ஜாமினில் வெளியாகி உள்ளார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி என பல்வேறு மாநிலங்களில் தனது ஆசிரமங்களின் கிளைகளை விரிவு படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து தான் வசித்து வரும் தீவிற்கு கைலாசா என பெயர் சூட்டியுள்ளார். அங்கு அவருக்கு தனி பாஸ்போர்ட்,  அந்த நாட்டிற்கென தனியாக கொடி, கரன்சி, இணையதளம் வெளியுறவு கொள்கை போன்றவற்றை வெளியிட்டு வரிசையாக ஆட்டம் காட்ட தொடங்கியுள்ளார். மேலும் youtube இல் பேட்டி கொடுத்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டார்.

இவர் மீது பெங்களூருவில் சில வழக்குகள் இருப்பதனால் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார். ஆனால் கைலாசாவில் நித்தியானந்தாவுடன் பெண் தோழிகள் பலரும் தஞ்சம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்தியாவில் அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்டு தரக் கோரி  போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் நித்தியானந்தா கைலாசாவின் ராஜ வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கைலாசா  எங்கிருக்கிறது? நித்தியானந்தா பிடிபடுவாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற  நாடுகளில் சில கோவில்களை நித்தியானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒவ்வொரு சமயத்திலும் கைலாச தீவு எங்கு அமைந்துள்ளது என யூகங்கள் வெளியான நிலையில் தற்போது அது குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பசிபிக் பெருங்கடலில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றான ஒன்றில் தான் அந்த கைலாசா  தீவு இருக்கிறதாம். பாஜக இலங்கையில் அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வருகின்ற நிலையில் நித்யானந்தா மூலமாக சில திருப்புமுனை சம்பவங்கள் நடைபெறலாம் என்று கூறி வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.