நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.

இந்நிலையில் சென்னையில் விவசாய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அங்கிருந்த பெண்களுடன் இணைந்து நடவு நட்டார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரது சட்டை கிழிந்தது. அந்த சட்டையை மாற்றாமல் அப்படியே நிகழ்ச்சி முழுக்க இருந்தார். அவர், “விவசாயத்தால் கிழிந்த சட்டை, அப்படியே இருக்கட்டும். விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்.