2023 ஐபிஎல்லில்  அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன்  ஹெவி ஹிட்டர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார் சிஎஸ்கே வீரர் ரஹானே.. 

இந்த சீசனுக்கு முன் அவருக்கான எதிர்பார்ப்புகள் இல்லை. சென்னை அணியால் (சென்னை சூப்பர் கிங்ஸ்) அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார். அணியில் வாய்ப்பு கிடைத்த பிறகு தற்போது அவருக்கு வானமே எல்லை. அந்த அளவிற்கு தனது பேட்டால் பதில் சொல்கிறார்.. அவர்தான் மூத்த கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே.

ஹெவி ஹிட்டர்களை பின்னுக்கு தள்ளிய ரஹானே :

அஜிங்க்யா ரஹானே பெரும்பாலும் ஒரு டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்டுள்ளார். இப்போது வித்தியாசமான ஸ்டைலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட்டிங் செய்து சென்னை அணியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் அவரது ஆக்ரோஷம், இந்த ஐபிஎல்லில் இதுவரை அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை  பெற்றுள்ளார்.

ஹெவி ஹிட்டர்களை பின்னுக்குத் தள்ளி 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரஹானே முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் (189ஸ்ட்ரைக் ரேட்), பூரன் (185 ஸ்ட்ரைக் ரேட்), சூர்யகுமார் யாதவ் (168 ஸ்ட்ரைக் ரேட்) ஆகியோர் உள்ளனர்.

விதவிதமான ஷாட்களை விளையாடி மிரட்டும் ரஹானே :

முந்தைய சீசன்களில் ரஹானேவின் ஸ்டிரைக் ரேட் பெரிதாக இல்லை. 2008 முதல் 2022 வரையிலான அவரது பேட்டிங் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அவர் 120.67 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை எடுத்தார். சராசரி 30.86. இந்த சீசனில் இதுவரை அவரது சராசரி 52.25 ஆக உள்ளது. மேலும் அலை அலையாக சிக்ஸர்களை அடித்து வருகிறார். இந்த சீசனில் அவர் 9 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் அடிக்கிறார். விதவிதமான ஷாட்களை ஆடி மகிழ்விக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிராக அவர் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவுக்குஎதிரான ஆட்டத்தில் ரஹானே சூறாவளி தாக்குதலை ஏற்படுத்தினார். அவர் 29 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 71 ரன்கள் (245 ஸ்ட்ரைக் ரேட்டில்) எடுத்தார்.. அணியின் அபார ஸ்கோருக்கு வழி வகுத்தார். மும்பைக்கு எதிரான போட்டியிலும் 27 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். அவர் இதுவரை விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் மொத்தம் 209 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 153 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரஹானே 2 முறை மட்டுமே 200 ஸ்டிரைக் ரேட்டுடன் ரன்களை குவித்தார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் இந்த சீசனில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் சென்னையை பெற்ற ரஹானே தனது அற்புதமான ஆட்டத்தால் அணிக்கு வலு சேர்த்து வரும் நிலையில், மறுபுறம் சில கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ள மற்ற அணி வீரர்கள் மோசமாக செயல்படுகின்றனர். அதன்படி அவர்களுடன் ஒப்பிட்டு ரஹானேவை புகழ்ந்து தள்ளுகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள். ஏலத்தின் போது ரஹானேவை ரூ 50 லட்சத்துக்கு எடுக்கும்போது, இவரை ஏன் எடுக்கிறார்கள், இவர் டெஸ்ட் பிளேயர் என சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் கூட யோசித்திருக்கலாம். ஆனால் இப்போது இவரது அடியை பார்த்தால் யாருப்பா இவரு, ரஹானேவா இல்ல.. வேற யாருமா என ரசிகர்கள் நம்ப முடியாமல் புகழ்ந்து வருகின்றனர்.. இவரை ரஹானே 2.0 எனவும் கூறி வருகின்றனர்..