
நம் வீட்டில் பொதுவாக பல உணவு வகைகளை செய்திருப்போம். ஆனால் சில உணவுகள் மட்டுமே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதன்படி ஆந்திரா ஸ்டைல் பூசணிக்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- தனியா – 1 தேக்கரண்டி
- சீரகம் – 3 தேக்கரண்டி
- பூசணிக்காய் – 200 கிராம்
- இஞ்சி – 2 துண்டு
- பச்ச மிளகாய் – 4
- துவரம் பருப்பு – 1 கப்
- கறிவேப்பிலை – கொஞ்சம்
- துருவிய தேங்காய் – 3 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
- தயிர் – 1 கப்
- வெல்லம் – 1 துண்டு
- கடுகு – 1 தேக்கரண்டி
- காஞ்ச மிளகாய் – 2
- உப்பு – தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- தண்ணீர் – 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் வெந்தயம், மிளகு, தனியா, சீரகம் ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் கொஞ்சமாவது கருவேப்பிலை மற்றும் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் வருத்ததும் பெருங்காயத்தூள், பிறகு தயிரை சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கலந்து சரியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும். அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய், மஞ்சள் தூள், பூ மற்றும் வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றை தாளிக்க வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பிறகு அரைத்து வைத்த கலவையை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம். ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.