பி.இ. படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 440க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி இ பி டெக் படிப்புகளில் சேர்வதற்கு கலந்தாய்வுகளானது நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ம் தேதி நிறைவு பெற்றது. சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து. அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது