சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது அறிவியல் ரீதியிலான உண்மை ஆகும். அந்த வகையில் நாளை(மார்ச் 25), சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 4.39 மணிக்கு முடிவடைகிறது.

இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம், பகல் நேரத்தில் ஏற்படுவதால், இதனை இந்தியாவில் பார்க்க முடியாது. கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், வடதுருவம், கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியும்