நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ரோஸ் மவுண்ட், சர்ச்ஹில் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் தங்கும் விடுதியில் வளர்க்கப்பட்டு வரும் நாயை வேட்டையாடுவதற்காக சிறுத்தை தடுப்பு சுவரை தாண்டி உள்ளே நுழைகிறது. பின்னர் விடுதி வளாகத்தில் இருந்த நாயை சிறுத்தை வேட்டையாடி கவ்வி சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்