மும்பை பன்வெல் – சிஎஸ்எம்டி லோக்கல் ரயிலில் மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அண்மையில் நாலாசோபாரா லோக்கல் ரயிலில் கதவை மூடுவது தொடர்பான தகராறில் ரோஷன் சுவர்ணா என்ற குடிகாரன், மயங்க் லோஹர் என்ற இளைஞரை கொலை செய்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

“>

இந்த லோக்கல் ரயிலில் ஏறிய அந்த போதை ஆசாமி, சக பயணியை நோக்கி, “நான் ஏற்கனவே நான்கு கொலைகளைச் செய்துள்ளேன், இப்போது அடுத்தது உன்னுடைய முறைதான்” என்று கூறி பயங்கரமாக மிரட்டல் விடுத்து அட்டகாசம் செய்துள்ளார்.

இந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல் சம்பவங்கள் மும்பை லோக்கல் ரயில்களில் பயணிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார், ரயிலில் ரகளை செய்து கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனால் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசாரின் ரோந்துப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் இதுபோன்ற குடிகார நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.